மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் மட்டுமே நிதி வழங்குவதாக கூறுகிறது. ஆனால், “மத்திய அரசு ‘அனைவருக்கும் கல்வி’ என்ற கொள்கையை நாங்களும் கூறுகிறோம், நீங்கள் சொல்கிறீர்கள்; இதற்கும் மத்திய அரசு நிதியை வழங்காமல் இருப்பது எந்த விதத்தில் நியாயமாகும்?” என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேள்வி எழுப்பினார்.
அன்பில் பொய்யாமொழியின் 25ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் திருவுருவப்படத்திற்கு மாலை அணிந்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேசிய அவர், மத்திய அரசிடம் இருந்து பள்ளிக்கல்வித் துறைக்கு கடந்த ஜூன் மாதம் வரை 573 கோடி ரூபாயும், கடந்த ஆண்டு வரவேண்டிய 249 கோடியும் பெறப்படாமல் உள்ளதாகத் தெரிவித்தார்.
திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சியின் உறுப்பினர்கள், மத்திய கல்வித்துறை அமைச்சரை சந்தித்து நிதி வழங்குமாறு வலியுறுத்தியதாகவும், அவர்களிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் இல்லையெனவும் அவர் கூறினார்.
“மத்திய அரசு கல்விக்கான நிதியை நிறுத்தி விடக்கூடாது; இது மாணவர்களின் கல்விக்கு மாறுபட்ட பிரச்சினையாகிறது. புது கல்வி கொள்கையில் இணைய வேண்டும் என மத்திய அரசு அழுத்தம் தருகிறது, ஆனால் இதற்காக நிதி நிறுத்துவது நியாயம் அல்ல” எனக் கூறியார்.
“ஜிஎஸ்டியுடன் தொடர்புடைய அனைத்து தொகைகளும் மத்திய அரசினரிடமிருந்து பெறப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக கடுமையான நிதி சுமைகளை சமாளிக்க வேண்டிய நிலையில், கல்வி நிதி சுமையையும் சமாளிக்க முனைந்துள்ளோம்” என்றார்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தேவையான அனைத்தும் வழங்கப்படும் எனவும், தமிழக அரசும், முதல்வரும் கடுமையான நிதி சுமைகளை சமாளிக்க தயார் என்றும் அவர் கூறினார்.