கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சக்திநகர், பொன்நகர், சாய்நகர், காஸ்மோ வில்லேஜ் பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 18 ஆண்டுகளாக அடிப்படை வசதிகளை இழந்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த பகுதிகளில் தெருவிளக்கு, குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டிய பொதுமக்கள், இன்று ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மக்கள் அடிக்கடி முறையிட்டு கோரிக்கை அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சாலை வசதி இல்லாததால் வாகனங்கள் செல்ல முடியாது, விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன. இரவு நேரங்களில் அச்சத்துடனே வாழ வேண்டிய நிலை உள்ளது.
அவர்களின் கோரிக்கைகளை கேட்ட காவல் துறையினர், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை முடித்துவைத்தனர். மக்கள் உடனடியாக பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர்.
Leave a Reply