Tuesday, January 21

மத்திய பிரதேச கல்லூரி பாடத்திட்டத்தில் ஆர்எஸ்எஸ் புத்தகங்கள்…

2020 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில், இந்திய பாரம்பரிய அறிவை மாணவர்கள் அறிய செய்யும் புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த மாநிலத்தின் உயர் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இதைச் செய்தியாக, அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பரிந்துரைக்கப்பட்ட 88 புத்தகங்களை கல்லூரிகள் தாமதமின்றி வாங்கி, அவற்றை பாடத்திட்டத்தில் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரைக்கப்பட்ட 88 புத்தகங்களில், ஆர்எஸ்எஸ் தலைவர்களான சுரேஷ் சோனி, தினநாத் பத்ரா, டி. அதுல் கோதாரி, தேவேந்திர ராவ் தேஷ்முக், சந்தீப் வசேல்கர் ஆகியோர் எழுதியவை அடங்கும். இவர்கள் அனைவரும் வித்யா பாரதியில் பங்களிப்புச் செய்தவர்களாகும். மேலும், மாணவர்களுக்கு இந்த புத்தகங்களைப் பற்றி தெளிவுபடுத்துவதற்காக, அனைத்து கல்லூரிகளிலும் “பாரதிய கியான் பரம்பரா ப்ரக்சோதா” எனும் செல்களை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அந்த மாநில பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதையும் படிக்க  கட்சியை காப்பதே முக்கியம்: ஓபிஎஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *