சிபிஐ அதிகாரிகள் முன்னாள் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன். மாணிக்கவேலின் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். அவர், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றியபோது சிலை கடத்தல்காரர்களுடன் சேர்ந்து சதியில் ஈடுபட்டதாக, இதே பிரிவில் பணியாற்றி பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்ட காதர் பாட்ஷா என்பவர் 2018-ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து, 2023-ல் சிபிஐ-யால் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், சிபிஐ அதிகாரிகள் இன்று காலை சென்னை பாலவாக்கத்தில் உள்ள பொன். மாணிக்கவேலின் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்த வழக்கின் தொடர்பாக பொன். மாணிக்கவேலிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொன். மாணிக்கவேல் 1989-ல் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று டி.எஸ்.பி.யாக தனது பணியினை தொடங்கினார். 1996-ல் ஐபிஎஸ் தேர்வில் தேர்வாகி, சேலம் மாவட்ட எஸ்.பி., உளவுப் பிரிவு டி.ஜி.ஜி., சென்னை மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையர், ரயில்வே ஐ.ஜி., சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. எனப் பல்வேறு பதவிகளில் இருந்து, 2018-ல் ஓய்வு பெற்றார்.
Leave a Reply