அவதார் 3 ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ஆம் ஆண்டு வெளியான “அவதார்” படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியை கண்டது. இரண்டு மணி நேரம் 40 நிமிடங்களாக நீடித்த இத்திரைப்படம் பார்வையாளர்களை மற்றொரு உலகுக்கே அழைத்துச் சென்றது. 25 கோடி அமெரிக்க டாலர்கள் செலவில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம், உலகம் முழுவதும் 280 கோடி அமெரிக்க டாலர்கள் வரையில் வசூல் செய்தது. இதுவரை வேறு எந்த திரைப்படமும் காணாத அளவுக்கு வசூல் சாதனையை “அவதார்” நிகழ்த்தியது.

இந்த வெற்றியின் பின்னர், 12 ஆண்டுகள் கழித்து, “அவதார்” படத்தின் இரண்டாம் பாகம் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி உலகம் முழுவதும் 52,000 திரைகளில் வெளியானது. படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், இந்தப் படம் சுமார் 15,000 கோடி ரூபாய் வசூலித்தது.

இந்நிலையில், “அவதார் 3” படத்தின் தலைப்பு “ஃபயர் அண்ட் ஆஷ்” (நெருப்பும் சாம்பலும்) என அறிவிக்கப்பட்டுள்ளது. டி23 எக்ஸ்போ நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜேம்ஸ் கேமரூன், “இதுவரை காணாத பண்டோரா (துணைக்கோள்) இப்போது பார்க்கலாம். இது ஒரு உணர்ச்சி பூர்வமான அனுபவமாகவும், கண்களுக்கு விருந்தாகவும் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். “அவதார் 3” திரைப்படம் 2025ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

2024 ஆம் ஆண்டிற்கான டாப் 10 பணக்காரர்கள் பட்டியல்...

Sun Aug 11 , 2024
உலகின் 2024 ஆம் ஆண்டிற்கான மிக செல்வந்த 10 நபர்கள்…. 1. டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான இலான் மஸ்க், தற்போது உலகின் மிக செல்வந்த நபராக உள்ளார்.2- ஜெஃப் பெசோஸ்3 – மார்க் ஸக்கர்பெர்க்4 – பெர்னார்ட் ஆர்னால்ட்5 – லாரி எலிசன்6 – வாரன் பஃபெட்7 – லாரி பேஜ்8 – பில் கேட்ஸ்9 – செர்ஜி பிரின்10 – ஸ்டீவ் […]
top 10 best award label golden badge symbol design 1017 32085 | 2024 ஆம் ஆண்டிற்கான டாப் 10 பணக்காரர்கள் பட்டியல்...