அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசிய அண்ணாமலையின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. இதனால் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
அண்ணாமலையின் உருவபொம்மை கும்பகோணம் உச்சி பிள்ளையார் கோவிலுக்கு அருகே எரிக்கப்பட்டது. அண்ணாமலையின் பேச்சை எதிர்த்து, அதிமுக தொண்டர்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். அண்ணாமலையின் பேச்சு, எடப்பாடி பழனிசாமி குறித்த அவதூறு கருத்துக்கள் மற்றும் போராட்டம், தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளன.
முந்தைய நிகழ்வில், பாஜக தலைவர் அண்ணாமலை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும் போது, “தவழ்ந்து காலில் விழுந்து பதவியை பிடித்த எடப்பாடி பழனிசாமிக்கு பண்பாடு மிக்க விவசாயி மகனை, பச்சை இங்கில் 10 ஆண்டுகாலம் கையெழுத்து போட்ட அண்ணாமலையை பற்றி பேச எடப்பாடி பழனிசாமி என்ற தற்குறிக்கு எந்த அதிகாரமும் கிடையாது” என்று மிகக் கடுமையாக பேசினார்..
இதற்கு எதிராக, அதிமுக சார்பில் எச்சரிகை வாசகங்கள் அடங்கிய பேனர்கள் ஒட்டப்பட்டு, பின்னர் அண்ணாமலையின் உருவபொம்மை எரித்து போராட்டம் நடைபெற்றது.