
பிராமணர்களை கேலி செய்பவர்கள் மீது PCR சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு கோவை மாவட்ட அனைத்து பிராமண சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு பிராமண சங்கத்தை சார்ந்தவர்களும் இந்து அமைப்பை சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர். மேலும் இதில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பிராமணர்கள் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், சனாதனம் காப்போம், பிராமண த்வேஷத்தை ஒழிப்போம் உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி முழக்கங்கள் எழுப்ப்பட்டன.