தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு வருகிற 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.
40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சியின் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி நாடாளுமன்ற அதிமுக வெற்றி வேட்பாளராக கருப்பையா நிறுத்தப்பட்டுள்ளார். தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அவர், இன்று திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்.பி.குமார் தலைமையில், பனையக்குறிச்சி, வேங்கூர், அரசங்குடி, துவாக்குடி, காட்டூர் உள்ளிட்ட 45 பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அவருக்கு, மேல தாளங்கள் முழங்க பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.
இந்த வாக்கு சேகரிப்பில் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அமைப்பு செயலாளர்கள் வளர்மதி, உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Leave a Reply