புதுச்சேரி அ.இ.அ.தி.மு.க மாநில கழக துணைச் செயலாளர் திரு. வையாபுரி மணிகண்டன் Ex. MLA வெளியிட்ட செய்திக்குறிப்பு:இதய தெய்வங்கள் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மாவின் ஆசியுடன், கழக பொதுச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமியின் ஆணைப்படி, அ.இ.அ.தி.மு.க 53-ஆம் ஆண்டு தொடக்கவிழா, 17.10.2024, வியாழக்கிழமை காலை 10 மணிக்கு முத்தியால்பேட்டை, காந்தி வீதி திருக்குறள் மணிக்கூண்டு அருகே, மாநில கழக துணைச் செயலாளர் திரு. வையாபுரி மணிகண்டன் Ex. MLA அவர்களின் தலைமையில் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில், திரு. வையாபுரி மணிகண்டன் கழகக் கொடியை ஏற்றி வைத்து, தலைவர்களின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பும் சிக்கன் பிரியாணியும் வழங்கப்பட்டு விழா சிறப்பாக நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில், மாநில கழக இணைச் செயலாளர் காசிநாதன், தொகுதி கழக செயலாளர் பழனிசாமி, இளைஞரணி செயலாளர் விக்னேஷ் காசிநாதன், முன்னாள் தொகுதி செயலாளர் மணி, தொகுதி தலைவர் கஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை தங்கள் ஊடகங்களில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.