77 வது சுதந்திர நாள் விழாவையொட்டி சென்னையில் 9,000 போலீஸார் பாதுகாப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னையில் 9,000 போலீசார்களின் பாதுகாப்புப் பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், 15.08.2024 அன்று நடைபெறும் 77வது இந்திய சுதந்திர நாளை முன்னிட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆ. அருண் உத்தரவின் அடிப்படையில், சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் சுதந்திர நாளையொட்டி, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து சுதந்திர தின விழா ஒவ்வொரு ஆண்டும் புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும். அந்த விழா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்குகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், காவல் ஆணையர் ஆ. அருண் உத்தரவின்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் N. கண்ணன் (தெற்கு), R. சுதாகர் (போக்குவரத்து), K.S. நரேந்திர நாயர் (வடக்கு) ஆகியோரின் மேற்பார்வையில், காவல் இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 9,000 காவல் அதிகாரிகள் மூலம் சிறப்பு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதையும் படிக்க  அரசியல் தலைவர்களின் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்...

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட சென்னையின் விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பிற முக்கிய இடங்களில் கூடுதல் காவல் குழுவினர் நியமிக்கப்பட்டு, தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதற்கிடையில், சென்னையில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து எதுவும் தகவல் இருந்தால் காவல் துறைக்கு அறிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சென்னையில் அனைத்து காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நான்கு சக்கர மற்றும் இருசக்கர ரோந்து வாகனங்களுடன் ரோந்து பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதுடன், முக்கிய இடங்களில் தடுப்புகள் அமைத்து, காவல் துறையினர் வாகனத் தணிக்கைகளை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வேதாரண்யத்தில், கடன் தொல்லையால், தம்பதியர் உயிரிழந்த சோகம்...

Mon Aug 12 , 2024
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள செண்பகராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர். குமரேசன் (35), புவனேஸ்வரி(28) தம்பதியினர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணமாகியுள்ளது.  இரண்டு ஆண்டுகள் கடந்தும்   குழந்தை இல்லை என்ற ஏக்கமும், கடன் தொல்லை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே மன உளைச்சலில் இருந்த இந்த தம்பதியினர், அவர்கள் வீட்டின் மொட்டை மாடியில் சென்ற உயர் அழுத்த மின்கம்பியை பிடித்துள்ளனர். இதில் கணவன் மனைவி ஆகிய இருவர் உடல் மீதும் உயர் […]
Screenshot 20240812 160157 Gallery - வேதாரண்யத்தில், கடன் தொல்லையால், தம்பதியர் உயிரிழந்த சோகம்...

You May Like