Tuesday, January 21

தமிழகத்தில் அ.தி.மு.க. – திமுக இடையே தான் போட்டி.

திருச்சியில் அதிமுக தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அதிமுக கூட்டணி தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தி பேசியதாவது. இந்த தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. – திமுக இடையே தான் போட்டி.

மதுரை எய்ம்ஸ் கல்லை நாடாளுமன்றத்தில் காட்டி அழுத்தம் கொடுக்க வேண்டும். 38 பிரதிநிதிகள் ஐந்து ஆண்டுகளாக என்ன செய்தார்கள்?

நீட் தேர்வுக்கு காரணமே தி.மு.க. – காங்கிரஸ் தான். சாதனை, சாதனை என்று கூறினால் போதாது, செய்து காட்ட வேண்டும்.

அ.தி.மு.க. சிறப்பான நிர்வாகத்தை வழங்கினோம். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

இதையும் படிக்க  திருச்சி இளங்காட்டு மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்து, மாட்டுவண்டியில் சென்று வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் கருப்பையா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *