Sunday, April 20

புதுச்சேரி குருசுமாநகரில் வேளாங்கண்ணி மாதா திருத்தேர் கொடியேற்ற விழா…

புதுவை குருசுமாநகர் பத்மினி தோட்டம் பகுதியில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் திருத்தேர் பெருவிழாவை முன்னிட்டு 48-ம் ஆண்டு கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் அந்தோணிசாமி பங்குத்தந்தை கலந்துகொண்டு ஜெபமாலை பிரார்த்தனை செய்து கொடியேற்றி வைத்தார்.

இவ்விழாவின் சிறிய தேர் பவணியில் ஏராளமான கிறிஸ்தவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு மந்திர ஜெபம் ஓதியபடி பவணியில் பங்கேற்றனர்.

விழாவின் அடுத்தகட்டமாக செப்டம்பர் 7ம் தேதி அன்னையின் பெரிய தேர் ஊர்வல நிகழ்ச்சி நடைபெறும் என்றும், அன்றைய தினம் ஜெபமாலை பிரார்த்தனையும் நடத்தப்படும் என ஆலய குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும், செப்டம்பர் 8ம் தேதி அன்னையின் கோயிலில் சிறப்பு விழா நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தற்போது விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலயத்தின் கிறிஸ்தவர்கள் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க  அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *