நடந்து வரும் மக்களவைத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் மூன்று நாட்கள் உள்ள நிலையில், மும்பையில் இன்று நடைபெறவுள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பிரதமர் மோடியுடன் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா (NMS) தலைவர் ராஜ் தாக்கரேவும் பங்கேற்கயுள்ளனர்.2024 மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறயுள்ளது.
மக்களவைத் தேர்தலின் முதல் நான்கு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்ததை அடுத்து ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு மே 20 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மக்களவைத் தோ்தலில் மகாராஷ்டிரத்தில் தாதரில் உள்ள சிவாஜி பூங்காவில் இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் பாஜக கூட்டணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் வாக்குகள் கோரி பேசவுள்ளதாக கூறப்படுகிறது.பொதுக் கூட்டத்தில் ஏராளமான முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.