![மீண்டும் கொரோனா அலை! மீண்டும் கொரோனா அலை!](https://thenewsoutlook.com/wp-content/uploads/2024/05/Coronavirus_H-1024x621.png)
சிங்கப்பூரில் புதிய கொரோனா அலை பரவுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.கடந்த 5 தேதி முதல் 11-ஆம் தேதி வரை மட்டும் 25,900 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சா் ஓங் யே குங் கூறுகையில், ‘நாம் பெரிய கொரோனா அலையின் ஆரம்பக்கட்டத்தில் இருக்கிறோம் .இந்த காலகட்டத்தில் கவனமாக இருக்க வேண்டும் . புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை பரவலாக அதிகரித்து வருகிறது. இன்னும் 2 முதல் 4 வாரங்களில் இந்த அலை உச்சத்தைத் தொடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.எனவே, பொதுமக்கள் அனைவரும் மீண்டும் முகக்கவசம் அணியவேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.