அமெரிக்காவின் டெக்ஸாஸில் உள்ள Fort Worth Zoo உயிரியல் பூங்காவில் கர்ப்பமாக இருந்த செகானி என்ற கொரில்லாவிற்கு சிசேரியன் மூலமாக குட்டி கொரில்லா பிறந்துள்ளது.
பிரீக்ளம்ப்சியா என்பது கர்ப்ப காலத்தின் போது ஏற்படும் தீவிர ரத்த அழுத்த நிலையால் செகானி என்ற கொரில்லா பாதிக்கப்பட்டிருந்தால் தாய் மற்றும் குழந்தையின் உயிரை காப்பாற்ற அறுவை சிகிச்சை அவசியம் என மருத்துவர்கள் முடிவெடுத்தனர். அதைத் தொடர்ந்து நடந்த அறுவை சிகிச்சையில் ‘குட்டி’ கொரில்லா பிறந்தது.
நான்கு முதல் ஆறு வாரங்களுக்கு முன்னதாக பிறந்த இந்த கொரில்லாவுக்கு ஜமீலா என பெயர் வைத்துள்ளனர். தற்போது செகானி மற்றும் ஜமீலா ஆரோக்கியத்துடன் இருப்பதாக ஃபோர்ட் வொர்த் உயிரியல் பூங்கா தெரிவித்துள்ளது.