பொள்ளாச்சியில் உள்ள மிராக்கல் ஒருங்கிணைந்த மருத்துவ மையம் மற்றும் யோகா மற்றும் மத்திய அரசின் இயற்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் புற்றுநோய் சிகிச்சை பற்றிய ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
சக்தி குழுமத்தின் தலைவர் மாணிக்கம் மகாலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கத்தில் தமிழ்நாடு,கேரளா, உத்தரப்பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மருத்துவர்களும் மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் ராகவேந்திரா ராவ் பேசும்போது.,மத்திய அரசும் மிராக்கல் ஒருங்கிணைந்த மருத்துவ மையமும் இணைந்து புற்றுநோயை குணப்படுத்துவதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட போவதாக தெரிவித்தார்.
இதற்கான ஒப்பந்தம் இந்த நிகழ்ச்சியில் கையெழுத்தானதாக தெரிவித்த அவர் மேலும் மிராக்கல் மையத்தில் நடைபெற்று வரும் புற்றுநோய் சிகிச்சை பற்றி விவாதித்தோடு , மருத்துவமனையில் அனைத்து விதமான புற்று நோய்களையும் எவ்வித பக்க விளைவும் இன்றி குணப்படுத்தும் முறைகளை குறித்து மருத்துவ நிபுணர்கள் விளக்கினார், இந்த கருத்தரங்கில் ஓசோன் நிறுவனத்தின் முதன்மை மருத்துவர் சரண்யன் உடுமலை அரசு மருத்துவர் ராகவேந்திர ஸ்வாமி பங்கேற்று மருத்துவ மாணவர்களுக்கு புற்றுநோய் குறித்து எடுத்துரைத்தனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மிராக்கல் மேலாளர் ரமேஷ் குமார் மற்றும் NIAகல்வி நிறுவனங்களின் மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
Leave a Reply