கோவை ரயில் பயணிகள் மற்றும் மாநகர மக்கள் குறைந்த விலையில் தரமான உணவுகளை புதுவித அனுபவத்துடன் அனுபவிக்கும் வகையில், ரயில் நிலைய வளாகத்தில் பாபி குரூப் நிறுவனம் தனது ‘போச்சே புட் எக்ஸ்பிரஸ்’ என்ற ரெஸ்டாரண்ட்-ரயில் பெட்டியுடன் கூடிய புதிய ஹோட்டலை ஆரம்பித்துள்ளது.
இந்த புதிய ஹோட்டல் தொடக்க விழாவை முன்னிட்டு இன்று பிரியாணி சாப்பிடும் போட்டி நடைபெற உள்ளது. அரை மணி நேரத்தில் 6 பிரியாணி சாப்பிட்டால் 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து அதிக அளவில் மக்கள் இந்த பிரியாணி சாப்பிடும் போட்டியில் கலந்து கொள்ள பதிவு செய்துள்ளனர். போட்டியில் பங்கேற்க மக்கள் ஆர்வமாக வருகை தருகின்றனர்.
‘போச்சே புட் எக்ஸ்பிரஸ்’ ஹோட்டலில் தரமான உணவுகளை சுவைக்கும் அனுபவத்தை வழங்குவதுடன், ரயில் பயணிகள் மற்றும் கோவை மக்களுக்கு இது ஒரு புதிய அனுபவமாக அமையும்.
Leave a Reply