APAAR (Automated Permanent Academic Account Registry) என்பது இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் படிக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கப்படும் தனித்துவமான 12 இலக்க வாழ்நாள் அடையாள எண் ஆகும். இந்த ID மூலம் மாணவர்கள் தங்கள் கல்வி சாதனைகளை ஒரே இடத்தில் சேமித்து வைத்துக்கொள்ள முடியும். மேலும், இத்திட்டம் மாணவர்களுக்கு பள்ளிகள் அல்லது கல்வி நிறுவனங்களுக்கு இடையே மாற்றங்களை எளிதாக்கும்.
ஒவ்வொரு APAAR IDயும் DigiLocker உடன் இணைக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் மாணவர்கள் தங்கள் முக்கியமான கல்வி ஆவணங்களை பாதுகாப்பாகச் சேமிக்க முடியும். இந்த திட்டம், மாணவர்களின் கல்வித் தரவுகளை தொடர்ந்து பராமரிக்க உதவுவதாகும்.
Leave a Reply