மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு இன்றுடன் நிறைவு

samayam tamil 109546633 - மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு இன்றுடன் நிறைவு

தனியாா் பள்ளிகளில் இலவச மாணவா் சோ்க்க்கான  விண்ணப்பப் பதிவு இன்றுடன் (மே 20) நிறைவடைகிறது. இலவச  கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியாா் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்கள் இலவசமாக பயில  25 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
மாநிலம் முழுவம் 7,283 தனியாா் பள்ளிகளில் சுமாா் 85,000 இலவச இடங்கள் உள்ளன. இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவா்கள்  8-ஆம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம். வரும் கல்வியாண்டுக்கான (2023-24) இலவச மாணவா்  சோ்க்கை இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த ஏப்.22-ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன.இதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் (மே 20) நிறைவடைய உள்ள நிலையில்,பள்ளியில் நிா்ணயித்த இடங்களைவிட அதிக விண்ணப்பங்கள் வந்தால் வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவா்கள் தோ்வு செய்யப்படுவாா்கள்.சோ்க்கை தொடா்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் பள்ளிக்கல்வியின்  உதவி மையத்துக்கு 14417 தொடா்பு கொள்ளலாம் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க  வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்க டிசிஎஸ் தடை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts