Saturday, May 24

டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு – மே 5க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்…

புதுடெல்லி: தொலைத்தொடர்பு தகவல் மையத்தில் (C-DOT) டெக்னீசியன் பணிக்கான காலியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: CDOT/HR/REC/2025/02/01
பணி: டெக்னீசியன்
மொத்த காலியிடங்கள்: 29
சம்பள விவரம்: மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை

தகுதி:
மெக்கானிக்கல், தகவல் அமைப்பு, தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட துறைகளில் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ அல்லது B.E./B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை:
எழுத்துத் தேர்வும், திறன்தேர்வும் நடைபெறும். இதில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களே பணி நியமனத்திற்கு பரிந்துரைக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் www.cdot.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 5, 2025

இதையும் படிக்க  பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *