பிகாரில் நீட் தோ்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடா்பாக 13 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநிலக் காவல்துறையினா் தெரிவித்தனா். இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வு ‘(NEET-UG) நாடு முழுவதும் 557 நகரங்களில் கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்றது. பிகாரில் இத்தோ்வின் வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இவ்விவகாரம் தொடா்பாக மாநிலக் காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனா். இதுகுறித்து, மேலும் 6 பேரை பீகார் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதில், தேர்வர்கள், பெற்றோர், கைத்தறி தொழிலாளர்கள் மற்றும் ஒரு ஓட்டுநர் உட்பட 13 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். தனித்தனி இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, சுமார் 35 பேருக்கு கேள்வித்தாள்கள் கொடுக்கப்பட்டதாக தேர்வர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர் . மேலும்,30-50 லட்சம் பணம் கொடுத்ததாக தெரிவித்தனர்.