ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்ஆர்பி) நர்சிங் கண்காணிப்பாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட 1376 மருத்துவ பணியாளர் பதவிகளை நிரப்ப போட்டித் தேர்வு நடத்தவுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஆகஸ்ட் 17ம் தேதி (சனி) முதல் தொடங்கவுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில், டயட்டீசியன், நர்சிங் கண்காணிப்பாளர், ஸ்பீச் தெரபிஸ்ட், டயலசிஸ் டெக்னீசியன், சுகாதாரம் மற்றும் மலேரியா ஆய்வாளர் (கிரேடு-3), ஆய்வக கண்காணிப்பாளர், பார்மசிஸ்ட், ரேடியோகிராபர் உள்ளிட்ட 20 வகையான பதவிகளில் காலியிடங்கள் உள்ளன.
ஒவ்வொரு பதவிக்கும் தேவையான குறிப்பிட்ட கல்வித் தகுதி கொண்டிருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 21 ஆண்டுகள் இடையே மாறுபடும். சில பதவிகளுக்கு வயது வரம்பு அதிகபட்சம் 43 ஆண்டுகள் வரை உள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை வயது தளர்வு வழங்கப்படுகிறது.
நேர்முகத் தேர்வு இல்லாமல், போட்டித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும். கணினி மூலம் தேர்வு நடத்தப்படும், தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஆகஸ்ட் 17ம் தேதி தொடங்கி செப்டம்பர் 16ம் தேதி வரை நடக்கிறது. விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய விரும்பினால் செப்டம்பர் 17 முதல் 26ம் தேதிக்குள் செய்யலாம். தேர்வு தொடர்பான மேலும் விவரங்களை ஆர்ஆர்பி இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
Leave a Reply