Wednesday, January 8

தமிழ்நாடு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்:  வாக்குப் பதிவு தொடங்கியது…..

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்:  வாக்குப் பதிவு தொடங்கியது…..

தமிழ்நாடு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு (ஜூலை 10) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, வாக்களிக்க அன்னியூர் வாக்குச்சாவடி மையத்திற்கு குடும்பத்தினருடன்  வருகை தந்தவர் முதல் வாக்காளராக தனது வாக்கினை பதிவு செய்தார்.விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினர் நா.புகழேந்தி, கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து, இந்தத் தொகுதியில் ஜூலை 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று ஜூன் 10-ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.மேலும்,ஜூலை 13-ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி, பிற்பகலில் முடிவுகள் அறிவிக்கப்படும்....
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பணிகள் தீவிரம்…

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பணிகள் தீவிரம்…

தமிழ்நாடு
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான பழனி தெரிவித்துள்ளார். இவர் மேலும் கூறியதாவது:* மொத்த வாக்காளர்கள் 2,37,031 பேர் உள்ளனர். இதில் 1,16,962 ஆண் வாக்காளர்களும், 1,20,040 பெண் வாக்காளர்களும், 29 மாற்று பாலினத்தவரும் அடங்குவர்.* 276 வாக்குச்சாவடி மையங்களில் மொத்தம் 1349 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் 662 வாக்குப்பதிவு கருவிகள் (Ballot Unit), 330 கட்டுப்பாட்டு கருவிகள் (Control Unit) மற்றும் 357 வாக்குப்பதிவினை உறுதி செய்யும் கருவிகள் (VVPAT) அடங்கும்.* பதற்றமான 45 வாக்குச்சாவடிகளில் பணிபுரிய 53 நுண்பார்வையாளர்கள் பணியில் இருப்பார்கள். தொகுதிக்கு உட்பட்ட அரசு, அரசு சார்பு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், பள்ளி ம...
ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி திருச்சியில் வழக்கறிஞர்கள் பேரணி

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி திருச்சியில் வழக்கறிஞர்கள் பேரணி

தமிழ்நாடு
ஒன்றிய பாஜக அரசு கடந்த ஆண்டு மூன்று குற்றவியல் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.பாரதீய நியாய சன்ஹிதா, பாரதிய நாக்ரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதீய சாக்ஷ்ய ஆதினியம் என்கிற பெயரிடப்பட்ட அந்த சட்டங்கள் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த சட்டங்கள் தடா, பொடா ,உஃபா சட்டங்களின் கூறுகளை உள்ளடக்கியதாக உள்ளது, மக்களாட்சி மாண்பையும், மனித உரிமைகளையும் பறிக்கும் விதமாக உள்ளது, நீதித்துறையின் அதிகாரங்களை பறிக்கும் விதமாகவும் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாகவும் உள்ளது. எனவே இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் நீதிமன்ற புறக்கணிப்பிலும் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று தமிழ்நாடு - புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மூன்று சட்ட...
சந்தீப் ராய் ராத்தோர் இடமாற்றம் !

சந்தீப் ராய் ராத்தோர் இடமாற்றம் !

தமிழ்நாடு
சென்னை காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ராத்தோர் இடமாற்றம். புதிய ஆணையராக, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் நியமனம்.சட்டம் ஒழுங்கு புதிய ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம்சென்னை பெருநகர காவல் ஆணையர் பதவி பறிக்கப்பட்ட சந்தீப் ராய் ராத்தோர் காவலர் பயிற்சி பள்ளி இயக்குநராக நியமனம்....
வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் கேள்வி …..

வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் கேள்வி …..

தமிழ்நாடு
வேங்கைவயல் சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளாகியும், இதுவரை எவரையும் கைது செய்யாதது ஏன் என  சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியை அசுத்தம் செய்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது ச்பீக் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி தரப்பில், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.மனுதாரர் தரப்பில், கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும், இந்த வழக்கு தொடர்பாக ஜூலை மாதத்துக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டது.இதற்கு பதிலளித்து அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திர...
புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை பாராளுமன்றத்தில் மீண்டும் விவாதத்தில் எடுத்துக்கொண்டு, குறைகளை களைய வேண்டும் – திருச்சியில் வழக்கறிஞர் சங்கங்கள் கோரிக்கை!

புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை பாராளுமன்றத்தில் மீண்டும் விவாதத்தில் எடுத்துக்கொண்டு, குறைகளை களைய வேண்டும் – திருச்சியில் வழக்கறிஞர் சங்கங்கள் கோரிக்கை!

தமிழ்நாடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக் குழுவின் அவசர பொதுக்குழு கூட்டம் கடந்த 29.6.2024 அன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்றது. அதில் புதிதாக வடமொழி தலைப்புடன் சட்டமாக்கப்பட்டுள்ள பிஎன்எஸ், பிஎன்எஸ்எஸ், பிஎஸ் ஆகிய சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறுதல் தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என கடந்த 1 ஆம் தேதி முதல் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணியிலிருந்து விலகி இருந்தனர். இந்நிலையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாளை திங்கட்கிழமை திருச்சியில் மாபெரும் பேரணி நடைபெறுகிறது. இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் பாலசுப்ரமணியன் பேசுகையில்….மாநிலம் முழுவதும் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொள்ளும் பேரணி திர...
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்

தமிழ்நாடு
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்த திட்டமிட்டு உள்ளனர் மேலும் கடந்த ஜூலை 1 ந் தேதி முதல் 8ந் தேதி வரை மாநிலம் தழுவிய அளவில் நீதிமன்ற பணியில் இருந்து விலகி இருப்பது என்று முடிவு செய்துள்ளனர். அதன் படி கடந்த ஜூலை 1-ம் தேதி தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் திருச்சி பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன்பு வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு திருச்சி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் (ஜாக்) பன்னீர்செல்வம்...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட்டிற்கான முன்பதிவு தொடங்கியது.<br>

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட்டிற்கான முன்பதிவு தொடங்கியது.

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி கொண்டாட ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்லுவது வழக்கம். இதற்காக, ரயில்வே நிர்வாகம் ஆண்டுதோறும் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்ய திட்டமிடுகிறது, அதாவது மக்கள் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.இந்த நிலையில், அக்டோபர் 29ஆம் தேதி சொந்த ஊர் செல்லவுள்ளவர்களுக்கான முன்பதிவு தொடங்கியது. இன்று, தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 30ஆம் தேதி சொந்த ஊர் செல்பவர்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.இன்று காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்குவதால், மக்கள் தயாராகி கொள்ள வேண்டும். இணையதளம் அல்லது ரயில் நிலையங்கள் மூலமாக டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது....
கோவையில் இன்று கடும் பனி மூட்டம்…..

கோவையில் இன்று கடும் பனி மூட்டம்…..

தமிழ்நாடு
கோவையில் இன்று  அதிகாலையில் கடும் பனி மூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இதனால் வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி சென்றனர்.கோவை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் இருப்பதாலும், கேரள எல்லையில் இருப்பதாலும் கோவை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தான் கோவையை குளுகுளு நகரம் என்றும் அழைப்பது உண்டு. அதன்படி ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் ஆகிய மாதங்களில் தென்மேற்கு பருவ மழையும், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் வடகிழக்கு பருவமழை, ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் குளிர்கால மழை, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் கோடை கால மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தென்மேற்கு பருவமழை  தாமதமாக பெய்ய தொடங்கி விட்டது. இன்னும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கோவையில் அதிகாலையில் பனி மூட்டம் நிலவி வருகிறது. இந்த நிலையில் காலை  பனிமூட்டத்தால் வாகன ...
இனி உங்கள் திருமண பத்திரிக்கையை திருப்பதி ஏழுமலையானுக்கு அனுப்பலாம்!

இனி உங்கள் திருமண பத்திரிக்கையை திருப்பதி ஏழுமலையானுக்கு அனுப்பலாம்!

தமிழ்நாடு
திருமணம் நிச்சயமாகி, கல்யாண பத்திரிக்கை அடித்து உறவினர்களுக்கெல்லாம் கொடுக்க துவங்கும் முன், திருமணத்துக்கு கிட்டத்தட்ட ஒரு மாதம் முன்பே திருப்பதி கோயிலுக்கு அனுப்பி வைத்து, ஏழுமலையானின் ஆசிர்வாதத்தை பெறும் புதிய திட்டம் அமல்படுத்தப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அப்படி பத்திரிக்கை அனுப்பும் பட்சத்தில் கோவிலில் இருந்து பிரசாதம் உங்கள் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். அத்துடன் புதுமண தம்பதிகள், திருமணத்தின்போது கையில் கட்டிக் கொள்ளும் கங்கணம், குங்குமம் மஞ்சள் அனுப்பி வைக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் திருமண முக்கியத்துவத்தை சொல்லும் ஒரு புத்தகமும் அனுப்பி வைக்கப்படும்.நமக்கு கல்யாண பத்திரிக்கையை சுவாமிக்கு சமர்ப்பித்த நிம்மதியும் திருப்பதி கோயிலில் இருந்து பிரசாதம் கிடைத்த மாதிரியும் ஆகிவிடும். .திருமண பத்திரிக்கையை அனுப்ப வேண்டிய முகவரிToSri...