விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான பழனி தெரிவித்துள்ளார்.
இவர் மேலும் கூறியதாவது:
* மொத்த வாக்காளர்கள் 2,37,031 பேர் உள்ளனர். இதில் 1,16,962 ஆண் வாக்காளர்களும், 1,20,040 பெண் வாக்காளர்களும், 29 மாற்று பாலினத்தவரும் அடங்குவர்.
* 276 வாக்குச்சாவடி மையங்களில் மொத்தம் 1349 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் 662 வாக்குப்பதிவு கருவிகள் (Ballot Unit), 330 கட்டுப்பாட்டு கருவிகள் (Control Unit) மற்றும் 357 வாக்குப்பதிவினை உறுதி செய்யும் கருவிகள் (VVPAT) அடங்கும்.
* பதற்றமான 45 வாக்குச்சாவடிகளில் பணிபுரிய 53 நுண்பார்வையாளர்கள் பணியில் இருப்பார்கள். தொகுதிக்கு உட்பட்ட அரசு, அரசு சார்பு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply