தஞ்சாவூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,விஜய் அரசியல் பிரவேசம் குறித்து கேட்டதற்கு, யார் கட்சி ஆரம்பித்தாலும் பயமில்லை. இன்னொருத்தர் கட்சி ஆரம்பித்ததை கண்டு அஞ்ச வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை. மக்கள் தான் எஜமானர்கள். யார் தேவை – தேவை இல்லை என்று தீர்மானிப்பார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து கேட்டதற்கு, தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் […]
தமிழ்நாடு
சென்னை பெரம்பூர் பகுதியில் கடந்த மாதம் 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் இந்த வழக்கில் பிரபல ரவுடிகளான நாகேந்திரன் அவரது மகன் அஸ்வத்தாமன் மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷ் சகோதரர் பொன்னை பாலு உள்ளிட்ட 27 நபர்களை செம்பியம் தனிப்பட்ட கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் சிலரை தனி இடத்தில் வைத்து செம்பியம் தனிபடை போலீசார் தீவிர விசாரணை […]
நெல்லை மாவட்டம் திசையன்விளையிலிருந்து 27 பயணிகளுடன் சென்னை நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பேருந்து, திருச்சியில் டயர் வெடித்து தீப்பிடித்து எறிந்தது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக பேருந்தில் பயணித்த 27 பேரும் உயிர்த்தப்பினர். நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இருந்து சென்னை நோக்கி 27 பயணிகளுடன் தனியார் பேருந்து சென்றுள்ளது. இப்பேருந்து மதுரை – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் உள்ள மன்னார்புரம் மேம்பாலத்தினை இன்று அதிகாலை சுமார் 02.10 மணிக்கு […]
கிருஷ்ணகிரியில் போலி என்சிசி கேம்ப் நடத்தி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்த சிவராமன் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார் இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 5.30 மணி அளவில் உயிரிழந்துள்ளார்.. சிவராமன் பாலியல் தொல்லை வழக்கில் தன் கைது செய்வோம் என அறிந்து 16 மற்றும் 18ஆம் தேதி கைது […]
திருப்பூரில் பவர்டேபிள் உரிமையாளர் சங்கத்தினர், பனியன் உற்பத்தியாளர்களிடம் 7% கூலி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையின்படி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே, 19-ந் தேதி தொடங்கிய இந்த போராட்டத்தில், 300-க்கும் மேற்பட்ட பவர்டேபிள் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இதுவரை, 7% கூலி உயர்வை வழங்காத நிறுவனங்களில் இருந்து ஆர்டர்களை ஏற்க முடியாது என்று முடிவு செய்யப்பட்டு, வேலைநிறுத்தம் தொடர்ந்து நடைபெறுகிறது. இதனால், தையல் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் பார்சல் பெட்டியில் அசுத்தமான முறையில் ஆட்டு இறைச்சி கொண்டு வரப்பட்டதாக உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர் அந்த ரெயிலில் இருந்த இறைச்சியை பரிசோதனை செய்தனர். அப்போது, 3 நாட்களுக்கு முன்பு வெட்டப்பட்ட ஆட்டு இறைச்சி முறையாக பதப்படுத்தாமல், சுகாதாரமற்ற நிலையில் இருந்தது தெரியவந்தது. அந்த இறைச்சியை சென்னை ஓட்டல்களில் […]
தமிழக அரசு, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்கலாமா என்பதை குறித்து பொதுமக்களிடத்தில் கருத்துக்களை கேட்டு வருகிறது. இது, கோவை, திருப்பூர் மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள தென்னை விவசாயிகளின் கோரிக்கைக்கு பின்னர் எடுத்த நடவடிக்கையாகும். இந்த விவசாயிகள், தேங்காய் மற்றும் கொப்பறை தேங்காய்க்கு நியாயமான விலை கிடைப்பதில்லை என்று ஆவேசப்பட்டு, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயை விற்பனை செய்யுமாறு மாநில அரசை கேட்டுக்கொண்டனர். இதையடுத்து, அரசு, அட்டைதாரர்களின் கருத்துக்களை […]
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு, பெண் தாதா மலர்கொடி, கஞ்சா விற்பனை செய்த அஞ்சலை, ஹரிதரன் போன்றோர் மட்டுமல்லாமல், அதிமுக, திமுக, பாஜக, தாமாக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகளும் இந்த கொலைக்குப் பிணைப்பட்டிருப்பதாக […]
தமிழ்நாட்டில் பெரும்பாலான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் ஆங்கிலத்தில் மட்டுமே காணப்படுகின்றன. பல ஆண்டுகளாக தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், கடைகள் மற்றும் பொது இடங்களில் உள்ள அனைத்து பெயர் பலகைகளிலும் தமிழ் மொழியை கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தொழிலாளர் நல ஆணையம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், […]
மதுரை மாவட்டம் திருமங்கலம் முதல் விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில் வரை அமைக்கப்பட்ட நான்கு வழிச் சாலை பணிகள் முடிந்த நிலையில், தற்போது பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி நடந்துகொண்டிருந்தபோது, நத்தம்பட்டி அருகே அர்ஜுனா நதியில் கட்டப்பட்டுவரும் பாலத்தின் பணிக்காக சென்ற தொழிலாளர்கள், பள்ளத்தில் 2 பேர் பைக்குடன் இறந்து கிடப்பதை கண்டு போலீஸாருக்கு தகவல் அளித்தனர். நத்தம்பட்டி போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து, 2 […]