கோவை மாவட்டம் மற்றும் அனைத்து சாலையோர சிறு வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனிடம் நஞ்சப்பா ரோடு சாலையோர வியாபாரிகள் மனு அளித்தனர். சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட வியாபாரிகள், தங்களின் கடைகள் செயல்படாததால் குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். கோவை மாநகராட்சி அதிகாரிகளிடம் கடைகளை மீண்டும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். இந்த மனுவை மாவட்டத் தலைவர் மணி, […]
தமிழ்நாடு
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அதிமுகவினர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் புகைப்படத்தை எரித்து, காலணியால் அடித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது, அண்ணாமலை வெளியிட்ட கருத்துகளுக்கு எதிராக அதிமுகவினர் பதிவு செய்த கடும் எதிர்ப்பாகும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டிய அதிமுகவினர், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் இந்த […]
பங்களாதேஷில் பாதிக்கப்படும் இந்துக்களுக்கு கோவையில் இந்து முன்னணி மத்திய அரசே நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.. பங்களாதேஷத்தில் பாதிக்கப்படும் இந்துக்களுக்கு பாதுகாப்பு வேண்டி மத்திய அரசை வலியுறுத்தி இந்து முன்னணியின் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது. கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணியின் சார்பாக காந்தி பார்க் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் K.தசரதன் தலைமை வகித்தார் .மாநில நிர்வாக குழு உறுப்பினர் ஜே […]
திருச்சி கலையரங்கத்தில் “களத்தில் வென்றான்” குறும்பட வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் தயாரிப்பில், இயக்குனர் வார்பேர்ட் விக்கி இயக்கத்தில், நடிகர்கள் வேல ராமமூர்த்தி, திருச்சி ராஜேஷ் துரையார் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கதாபாத்திரங்கள் நடிப்பில் வெளிவந்துள்ள குறும்படம் “களத்தில் வென்றான்”. படத்திற்கு அருண் கணேஷ் இசை அமைத்துள்ளார். பாடகி சுருதி பின்னணி பாடலை பாடியுள்ளார். எடிட்டிங் பணியை சுதர்சன் செய்துள்ளார். இந்த […]
கோவை மாநகரில் மதுக்குடித்து வாகனம் ஓட்டுவதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்த பிரச்சினையைத் தடுப்பதற்காக, காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு, மதுவுடன் வாகனம் ஓட்டுபவர்களை அடையாளம் கண்டு அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், சொந்த வாகனங்களில் மதுக்குடிக்க வந்து திரும்பி செல்லும் நபர்களுக்காக மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கோவை மாநகர போலீசார் மதுபானக் கூடங்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். கடந்த ஆகஸ்ட் […]
கோவை விமான நிலையத்தில் ஷார்ஜாவிலிருந்து கடத்தப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து கைப்பற்றினர். கோவை விமான நிலையத்தில், ஷார்ஜாவுக்கு வாரத்திற்கு ஐந்து நாட்கள் விமான சேவை வழங்கப்படுகிறது. இன்றும் (ஆகஸ்ட் 26) காலை 3.45 மணியளவில் ஷார்ஜா விமானம் கோவையை வந்த பிறகு, அதிகாலை 4.30 மணியளவில் மீண்டும் ஷார்ஜாவுக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கக் கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் […]
செப்டம்பர் 1ஆம் தேதி முதல், தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. இப்புதிய கட்டண மாற்றத்தின் படி, இந்த சுங்கச்சாவடிகள் வழியாக கடந்து செல்லும் அனைத்து வாகனங்களும் ரூபாய் 5 முதல் ரூபாய் 150 வரை கூடுதலாக செலுத்த வேண்டியுள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் பராமரிப்பதற்காக சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகன ஓட்டிகளிடம் இருந்து சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வழக்கமாக, ஆண்டில் இரண்டு முறை சுங்க கட்டணம் […]
நடிகை நமீதா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்தபோது, ஒரு அதிகாரி அவரிடம் மதம் மற்றும் வகுப்பை குறித்த கேள்விகள் எழுப்பியதாக புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து நமீதா ஒரு வீடியோவின் மூலம் பகிர்ந்துள்ளார். வீடியோவில், அவர் கோவிலுக்கு சென்றபோது, ஒரு பெண் அதிகாரி தன்னிடம் “உங்களுடைய மதம் என்ன? எந்த வகுப்பை சேர்ந்தவர்?” என்று கேட்டதாக கூறினார். மேலும், கோவில் நிர்வாகம் தன்னிடம் இந்து […]
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் குடியரசுத் தலைவர் பதக்கங்கள், உள்துறை அமைச்சர் பதக்கங்கள், மற்றும் முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சிறப்பாக செயலாற்றிய காவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார். உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “காவல்துறை என்னுடைய துறை என்பதால் இந்த நிகழ்ச்சி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நானே பதக்கம் வாங்கியது போல் மகிழ்ச்சியடைகிறேன். பதக்கம் வென்ற காவலர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். பதக்கங்களுக்கு […]
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் நடந்த விபத்தில் பணியில் இருந்த ஊழியர் உயிரிழந்தார். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 31 வயதான கணேசன், விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் பணியாற்றி வந்தார். சம்பவம் நிகழ்ந்த போது, அவர் திருச்சிக்கு செல்லும் வழியில் பணியில் இருந்தார். சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்த காரிடம் சுங்கவரி வசூலிக்கிறார். அதே நேரத்தில், காருக்கு பின்னால் நின்றிருந்த லாரி மற்றும் அதன் பின்புறம் வந்த முட்டை லாரி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து, […]