தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்கத்தின் கோவை கிளை சார்பில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கான பேரவை கூட்டம் கோவையில் இந்திய மருத்துவ சங்கம் அரங்கில் நடைபெற்றது. முன்னாள் கண்காணிப்பு பொறியாளர் கே. இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஓய்வு பெற்ற முன்னாள் பொறியாளர்கள் கலந்து கொண்டனர். பேரவை கூட்டத்தின் முக்கிய நிகழ்வுகளில், 80 வயதைக் கடந்த உறுப்பினர்களை கௌரவித்தல், மாநில மற்றும் […]
தமிழ்நாடு
கோவை ரயில் நிலைய சந்திப்பில் அமைந்துள்ள செம்மனூர் நகைக்கடை உரிமையாளர் பாபி தொடங்கிய ஹோட்டல், அரை மணி நேரத்தில் ஆறு பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கும் போட்டியை அறிவித்ததால், பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதனால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த ஹோட்டலில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த செம்மனூர் நகைக்கடை உரிமையாளர் பாபி, ரயில் பெட்டியை ஹோட்டல் போல் வடிவமைத்து, தனது புதிய வியாபாரத்தை […]
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோட்டூர் மற்றும் ஆழியாறு அணை பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை மற்றும் மின்வாரிய துறைக்கு சொந்தமான குடியிருப்புகளில், சுமார் 30 ஆண்டுகளாக இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு குடியிருப்புகள் மிகவும் பழுதடைந்து சிதிலமடைந்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயகரமான நிலையில் உள்ளதால், முதியோர் மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இதனால் நடவடிக்கை […]
கோவை மாநகராட்சி 80வது வார்டில் உள்ள செல்வபுரம் மாநகராட்சி ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில், பொதுச் சுகாதார குழு தலைவர் பெ. மாரிசெல்வன் தலைமையில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர், 2024-2026 மறு கட்டமைப்புக்கான தலைவரும், துணைத் தலைவரும் தேர்வுசெய்யப்பட்டனர். புதிய தலைவர்களுக்கும், துணைத் தலைவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, பெ. மாரிசெல்வன் வாழ்த்துகள் தெரிவித்தார். இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியர்கள் தேவ சகாயம், தனலட்சுமி, […]
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சக்திநகர், பொன்நகர், சாய்நகர், காஸ்மோ வில்லேஜ் பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 18 ஆண்டுகளாக அடிப்படை வசதிகளை இழந்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதிகளில் தெருவிளக்கு, குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டிய பொதுமக்கள், இன்று ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மக்கள் அடிக்கடி முறையிட்டு […]
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள தென் குமாரபாளையம், சிஞ்சுவாடி, மற்றும் நம்பியமுத்தூர் ஆகிய பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் சென்ற பொதுமக்களை மர்ம நபர்கள் பட்டாக்கத்தி மூலம் மிரட்டி, அவர்களிடம் இருந்த செல்போன்கள் மற்றும் பணத்தை பறித்து வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட தென்குமாரபாளையத்தைச் சேர்ந்த திருமலைசாமி, சிஞ்சுவாடியை சேர்ந்த மணிகண்டன், மற்றும் நம்பியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த மனோகரன் ஆகிய மூவரும் கோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். […]
கோவை: இந்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் சார்பில், கோவை அவினாசி சாலை, வஉசி பூங்கா அருகிலுள்ள காவலர் சமுதாயக் கூடத்தில், மத்திய அரசின் ‘மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள்’ குறித்த விழிப்புணர்வு கண்காட்சி இன்று துவங்கியது. இந்த கண்காட்சி ஆகஸ்ட் 31 வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. கண்காட்சியில் மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து புகைப்படக் கண்காட்சி, ஆதார் திருத்தம், […]
காஞ்சிபுரம் மாநகராட்சியில் காலண்டர் தெருவைச் சேர்ந்த கஸ்தூரி (62), 2020-ம் ஆண்டு பணி ஓய்வு பெற்ற பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர். இவர் தனியாக வசித்து வந்த நிலையில், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருந்தார். கடந்த 22-ஆம் தேதி கஸ்தூரியின் வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் கஸ்தூரியின் வீட்டினுள் சென்று பார்த்தபோது, அவர் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார். உடல் கைப்பற்றி […]
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கலை கல்லூரியில், தமிழ்த்துறை உதவி பேராசிரியர் ஜெயவாணி ஸ்ரீ, கடந்த மாதம் 18-ஆம் தேதி வகுப்பறையில் மாணவர்களை அவமதித்ததாக புகார் எழுந்துள்ளது. பேராசிரியர் சாதி ரீதியாக பேசியதாக குற்றம்சாட்டப்பட்டதால், மாணவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க கோரி தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், கல்லூரியில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, கல்லூரிக்கு நிர்வாகம் காலவரையற்ற விடுமுறை அறிவித்துள்ளது. மாணவர்களை சாதிப்பெயர் சொல்லி திட்டிய […]
கோயம்புத்தூர் ஸ்ரீ நாராயண மெஷின், ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளை, மற்றும் கோயம்புத்தூர் ஸ்ரீ நாராயண குரு அறக்கட்டளை ஆகியவை இணைந்து 170-ஆம் குருஜெயந்தி விழாவை விமரிசையாக கொண்டாடின. விழா காலை 5:30 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் கலசபூஜையுடன் தொடங்கியது. எஸ்.என்.எம் கல்வி நிறுவனங்கள் சார்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பூக்கோலம் போட்டியில் பங்கேற்றனர்.விழாவின் சிறப்பு விருந்தினராக திரு. K. ஜனார்த்தனன் பங்கேற்று, தமிழ் கருத்தரங்கு சொற்பொழிவை […]