குடிநீர் வடிகால் ஓய்வூதியர் சங்க பேரவைக் கூட்டம்…

IMG 20240828 WA0072 - குடிநீர் வடிகால் ஓய்வூதியர் சங்க பேரவைக் கூட்டம்...

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்கத்தின் கோவை கிளை சார்பில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கான பேரவை கூட்டம் கோவையில் இந்திய மருத்துவ சங்கம் அரங்கில் நடைபெற்றது. முன்னாள் கண்காணிப்பு பொறியாளர் கே. இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஓய்வு பெற்ற முன்னாள் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

பேரவை கூட்டத்தின் முக்கிய நிகழ்வுகளில், 80 வயதைக் கடந்த உறுப்பினர்களை கௌரவித்தல், மாநில மற்றும் கிளை நிர்வாகிகளை கௌரவித்தல், மற்றும் வட்ட அலுவலர்களை கௌரவித்தல் ஆகியவை இடம்பெற்றன.

கூட்டத்தின் போது, முக்கியமான இரண்டு தீர்மானங்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது:

1. ஜல்ஜீவன் குடிநீர் திட்டம் செயல்படுத்தும் சூழலில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. சட்டப்பேரவையில் நிதியமைச்சர் அறிவித்தபடி, பழைய ஓய்வு திட்டத்தை விரைவில் அமல்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதையும் படிக்க  கணவர் மாவட்ட ஆட்சியர்,மனைவி மாநகராட்சியின் ஆணையர் என கடலூரில் கணவன் – மனைவி ஐஏஎஸ் அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், தமிழ்நாடு பொதுச் சேவை ஆணையம் மூலம் 50 இளநிலை பொறியாளர்கள் மற்றும் 48 இளநிலை வரை தொழில் அலுவலர்களை வாரியத்தில் நியமித்ததற்காக முதலமைச்சர் மற்றும் நகராட்சி குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே. என். நேருவிற்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் கோவை கிளை பிரபலர் வி. கந்தசாமி, மாநில பொதுச் செயலாளர் என். ராஜ்குமார், மாநில உப தலைவர் எஸ். சீதரன், மாநில இணை செயலாளர் கு. அண்ணாமலை, செயலாளர் கே. ஆரோக்கியசாமி, மேறகு மண்டல தலைமை பொறியாளர் கே. செல்லமுத்து உள்ளிட்ட ஓய்வு பெற்ற பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *