கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள வனக்கல்லூரியில் 27வது மாநில அளவிலான வனத்துறை விளையாட்டுப் போட்டிகள் 2 நாட்கள் நடைபெறவுள்ளன. இந்த போட்டிகளை தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாட்டின் 12 மண்டல வனத்துறையைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டிகள் துவங்குவதற்கான விளையாட்டு ஜோதி ஏற்றப்பட்டது. மேலும், இந்த ஆண்டில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்கள், வென்ற கோப்பைகளை அமைச்சரிடம் காண்பித்து […]

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற்றது. காலை 8.00 மணிக்கு தொடங்கி மாலை 9.00 மணிவரை நடந்த இந்த முகாமில், பேரூராட்சி மன்ற தலைவர் வெ. விஷ்வ பிரகாஷ் வரவேற்பு நிகழ்வை தொடங்கினார். கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமை வகித்த இந்த முகாமில், பொதுமக்களிடமிருந்து நேரடியாக குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். […]

தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம், திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர் சங்க கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் இராமமூர்த்தி, சங்கத்தின் முக்கிய செயல் திட்டங்களை விளக்கி பேசினார். இதில், அனைத்து மாவட்டங்களின் மாநில நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உரையாற்றினர். குறிப்பாக, சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம், உடனடியாக […]

மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமூன் அன்சாரி, திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து, பல்வேறு முக்கியமான விஷயங்களை பதிவு செய்தார். அவரது பேட்டியில், ஒன்றிய அரசின் “ஒரே நாடு, ஒரே தேர்தல்” கொள்கையை அமைச்சர் மன்றம் ஒப்புதல் அளித்ததை, ஏற்க முடியாததாக கூறினார். இது பாஜக தனது சுரண்டல் நோக்கத்தை நிறைவேற்ற, இந்திய ஜனநாயக அமைப்பை மாற்ற நினைக்கும் முயற்சியாக அவர் விமர்சித்தார். இந்த முடிவு இந்தியாவின் பன்முகத்தன்மை, கூட்டாட்சி தத்துவத்தை […]

1968 ஆம் ஆண்டு ரயில்வே ஊழியர்கள் குறைந்தபட்ச ஊதியம், அகவிலைப்படியை அடிப்படைச் சம்பளத்துடன் இணைத்து வழங்குதல், விலைவாசி உயர்வுக்கேற்ப அகவிலைப்படி உயர்த்துதல் போன்ற கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்தி உயிர்நீத்த 17 ரயில்வே ஊழியர்களுக்கு செவ்வணக்கம் செலுத்தும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், ரயில்வே தனியார்மயக் கொள்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, எஸ்ஆர்எம்யூ தலைவர் ராஜாஸ்ரீதர் தலைமையிலும், துணைப் பொதுச்செயலாளர் […]

தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் நகரச் செயலாளர் விஜயகுமார் தலைமையில், மேகுபாறை பள்ளிவாசல் மற்றும் பெரியார் சிலை அருகில் 400 பேருக்கு உணவு வழங்கி “மீளாது விழா” நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாநில செயலாளர் நவ்ஷாத் அலிகான், மாவட்டச் செயலாளர் அபூபக்கர் சித்திக், நகர இளைஞரணி செயலாளர் டி. குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட துணைச் செயலாளர் இமான் கண்ணன், நகர மாணவரணி செயலாளர் சமீம் உள்ளிட்ட […]

பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை தேச விரோதி என்று விமர்சித்ததை எதிர்த்து, பாஜக தலைவர் ஹெச். ராஜாவை கண்டித்து பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த விமர்சனம் தமிழகம் முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகையின் உத்தரவின்படி, ஹெச். ராஜாவின் செயலை கண்டித்து பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதன்படி, பொள்ளாச்சியில் திருவள்ளுவர் […]

பொள்ளாச்சி அருகே உள்ள சின்னம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட விஜய்நகரில் வசிக்கும் மலர் மணி, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்துள்ளார். மனுவில், “நாங்கள் உடுமலை ரோடு, சின்னம்பாளையம், விஜயநகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். மேலும், ஓடுகளால் மூடிய இரண்டு வீடுகளை கட்டி வாடகைக்கு விடுவதன் மூலம் வாழ்க்கையை நடத்தி வருகிறோம். இந்நிலையில், அருகில் உள்ள குடியிருப்பில் சுமார் 50 அடி உயரத்தில் ஒரு தென்னை மரம் உள்ளது. அந்த […]

திருச்சி: பாரதிய ஜனதா கட்சியின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச். ராஜா ராகுல் காந்தியை தேச விரோதி என்று கூறியதை கண்டித்து, திருச்சி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திருச்சி மாநகர மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல். ரெக்ஸ் தலைமையேற்றார். ஸ்ரீரங்கம் கோட்ட தலைவர் ஜெயம் கோபி மற்றும் திருவானைக்கோவில் கோட்ட தலைவர் தர்மேஷ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த […]

பொள்ளாச்சி அருகேயுள்ள கிணத்துக்கடவு பகுதியில் கள்ள சந்தையில் மது விற்றவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு, 260 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கிணத்துக்கடவு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்ததையடுத்து, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதன்படி, கோவில்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான பார் அருகே, விடுமுறை நாளில் அதிக விலைக்கு மது விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில், […]