
கோவை:உக்கடம் பேருந்து நிலையம் எதிர்புறம் அமைந்துள்ள போக்குவரத்து தீவுத்திடல் (ரவுண்டானா) பகுதியில் உழவு தொழிலையும், உழவர்களையும் போற்றும் விதமாக உழவர் சிலை நிறுவப்பட்டுள்ளது.



இந்நிகழ்ச்சி, தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, தைத் திருநாளின் 2ஆம் நாளான இன்று, உழவுத் தொழிலுக்கு உதவியுள்ள கால்நடைகளுக்கு நன்றி கூறும் விதமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
இதனையடுத்து, கோவையில் உள்ள உக்கடம் ரவுண்டானா பகுதியில் அமைக்கப்பட்ட உழவர் சிலைக்கு ‘ஆர் கோல்டு’ நிறுவனரான ரங்கசாமி மற்றும் ‘பிளாக் ஷிப் மீடியா’ நிறுவனர் சதீஷ்குமார் ஆகியோர் குடும்பத்துடன் ஒன்றிணைந்து பொங்கல் வைத்து, மாட்டுப் பொங்கல் திருவிழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.
