Friday, July 4

அரசியல்

சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சர்வ மத பிரார்த்தனை…

சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சர்வ மத பிரார்த்தனை…

அரசியல்
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற சர்வ மத பிரார்த்தனையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்… காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பிறந்தநாள் விழா கோவையில் நடைபெற்றது.. சர்வ மத பிரார்த்தனையாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முன்னதாக ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சாரதாம்பாள் கோவிலி்ல் சிறப்பு பூஜை நடைபெற்றது.தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.. இளைஞர் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப் பாளர் ஹரிஹரசுதன் தலைமையில் நடைபெற்ற இதில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னால் சட்டமன்ற உறுப்பினரும் ஆன எம்.என்.கந்தசாமி,கோவை செல்வன்,பச்சை மூத்த ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் சௌந்தர குமார்,மகேஷ் குமார் கவுன்சிலர் சங்கர் , ஷோபனா செல...
மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த முன்னாள் அமைச்சர்…

மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த முன்னாள் அமைச்சர்…

அரசியல்
மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து, தனது சொந்த நிதியில் பராமரிப்பு பணிகளை செய்து தருவதாக பொதுமக்களிடம் வாக்குறுதியளித்து உடனடியாக பணிகளையும் துவக்கிவைத்தார் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி.கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவை மாநகராட்சி, குனியமுத்தூர் 88 வது வார்டு, கே.ஜி.கே சாலை மற்றும், 87 வது வார்டு குறிஞ்சி நகர் உள்ளிட்ட இடங்களில் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக செங்குளம் நிறைந்து, தண்ணீர் ஊற்றெடுத்து அப்பகுதிகளை முழுவதுமாக ஆக்கிரமித்து வருகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி உடனடியாக சம்பவ இடங்களை நேரில் ஆய்வு செய்து அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதை தொடர்ந்து ஊற்று நீரால் பாதிக்கப்படும் பகுதிகளில் உடனடியாக தனது சொந்த நிதியில் இருந்து பராமரிப...
நடிகை கஸ்தூரி மீது தெலுங்கு பேசும் சங்கத்தினர் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்…

நடிகை கஸ்தூரி மீது தெலுங்கு பேசும் சங்கத்தினர் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்…

அரசியல்
கடந்த நான்காம் தேதி சென்னையில் நடைபெற்ற இந்து மக்கள் கட்சி கூட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி,300 வருடங்களுக்கு முன்னால் ஒரு ராஜாவின் அந்தபுற  பெண்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் தான் தெலுங்கு இன மக்கள் என குறிப்பிட்டிருந்தார். கஸ்தூரியின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் தெலுங்கு பேசும் பல்வேறு சமூகத்தை சார்ந்த வர்கள் இதற்கு தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். இந்த சூழலில் கோவையில் தமிழ்நாடு ரெட்டி நல சங்கம், தமிழ்நாடு கம்ம நாயுடு எழுச்சி பேரவை, தேவாங்க சமூக நல இயக்கம், தமிழ்நாடு கவர பல்ஜா நாயுடு நல சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்கள் கூறுகையில் விஜயநகர பேரரசு தொடங்கி கடந்த ஆயிரம் ஆண்டுகளாக தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தமிழ் மொழியை பாதுகாத்து தெலுங்கு பேசும் த...
த.வெ.க. முதல் மாநில மாநாடு வெற்றி மகளிர் அணியினர் கொண்டாட்டம்.

த.வெ.க. முதல் மாநில மாநாடு வெற்றி மகளிர் அணியினர் கொண்டாட்டம்.

அரசியல்
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் தலைமையில் கடந்த 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தவெக கட்சியின் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும், மற்றும் கட்சித் தொண்டர்கள் மற்றும் நடிகர் விஜயின் ரசிகர்கள் என லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பித்தனர். WhatsApp Image at AM தவெக, தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்த முதல் மாநாடு வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக பொதுச் செயலாளர் ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலோடும் கோவை தெற்கு மாவட்ட தலைவர் விக்னேஷ் அவர்களின் அறிவுறுத்தலோடும் கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சி நகர மகளிர் அணி தலைவர் லதா தலைமையில் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் இனிப்புகள் வழங்கி இந்த வெற்றி விழாவை கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி தலைவர் பாபு மாவட்ட ...
புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் மற்றும் விஜய் பங்கேற்க உள்ளதாக தகவல்…

புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் மற்றும் விஜய் பங்கேற்க உள்ளதாக தகவல்…

அரசியல்
சென்னையில் வரும் டிசம்பர் 6-ந்தேதி அம்பேத்கர் பற்றிய புதிய புத்தக வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில், விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்க உள்ளார். இதே விழாவிற்கு தவெக தலைவர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இருவரும் ஒரே மேடையில் பங்கேற்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.இந்நிலையில், திருமாவளவன் விழா குறித்து தன்னுடைய கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது: “விஜய் விழாவில் பங்கேற்பார் என சொல்லப்பட்டது. ஆனால் இது தவெக மாநாட்டுடன் தொடர்புடையதாக இல்லை. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புத்தகத்தை வெளியிடுவார், நான் அதை பெற்று கொள்வேன் என்பதே திட்டம். இது சுயமாக அமைக்கப்பட்ட விழா; அரசியல் நோக்கங்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டதாக கருதுவது சரியல்ல.” மேலும் "நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதாலே கூட்டணி மாறிவிடும் என்பது எந்தவித உளவியல்? நாங்கள...
கோவையில் தங்க நகை பூங்கா – முதல்வர் அறிவிப்பு தொழிலாளர்கள் பட்டாசு வெடிக்கும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்…

கோவையில் தங்க நகை பூங்கா – முதல்வர் அறிவிப்பு தொழிலாளர்கள் பட்டாசு வெடிக்கும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்…

அரசியல்
கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று வருகை புரிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை கெம்பட்டிகாலனி பகுதியில் தங்க நகை பட்டறைக்கு நேரில் சென்று தங்க நகை தொழில் புரியும் பொற்கொல்லர்கலின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அவரிடம் கோவையில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்க வேண்டும் கூட்டுறவு சொசைட்டி அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொற்கொல்லர்கள் முன்வைத்தனர் . WhatsApp Image at PM () இந்நிலையில் இன்று காலை கலைஞர் நூலக அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய முதலமைச்சர் கோவையில் தங்க நகை பூங்கா அமைக்கப்படும் என்ற அறிவிப்பை அறிவித்தார். முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து கெம்பட்டி காலனி பகுதியில் தங்க நகை தொழிலாளர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இந்த கொண்டாட்டமானது அனைத்து தங்க நகை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நட...
வீட்டுமனை வழங்க கோரிக்கை மனு : கோவையில் முதல்வரிடம் வழங்கிய பத்திரிகையாளர்கள் !!!

வீட்டுமனை வழங்க கோரிக்கை மனு : கோவையில் முதல்வரிடம் வழங்கிய பத்திரிகையாளர்கள் !!!

அரசியல்
கோவை,  பத்திரிகையாளர்களுக்கு  2 - ம் கட்டமாக சலுகை விலையில் வீட்டு மனை வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோயம்புத்தூர் அனைத்து பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பாக மனு அளிக்கப்பட்டது.கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவைக்கு வந்து இருந்தார். கோவையில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்த முதல்வரை பல்வேறு கட்சி மற்றும் அமைப்பினர் சந்தித்து தங்களது கோரிக்கைகளை மனுக்களாக தந்து வந்தனர். இதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் அனைத்து பத்திரிக்கையாளர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பாக பத்திரிகையாளர்கள் முதல்வரை நேரில் சந்தித்தனர். அப்போது தமிழ்நாடு அரசாங்கத்தின் சார்பாக பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டுமனை வழங்கி வரும் நிலையில் கோயம்புத்தூர் பத்திரிகையாளர்களுக்கு 2 ஆம் கட்டமாக வீட்டுமனை வழங்க உரிய நடவட...
“ஏரியில்கூட தாமரை மலரக் கூடாது” என கிண்டல் – அமைச்சர் சேகர்பாபு…

“ஏரியில்கூட தாமரை மலரக் கூடாது” என கிண்டல் – அமைச்சர் சேகர்பாபு…

அரசியல்
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் போரூரில் 16.60 ஏக்கர் பரப்பளவில் ரூ.12.60 கோடி மதிப்பில் உருவாக்கப்படும் ஈரநிலை பசுமை பூங்கா, ஏராளமான வசதிகளுடன் அடங்கியதாகும். இதில் 103 இருக்கைகள், செங்கல் நடைபாதை, கருங்கல் நடைபாதை, கூடைப்பந்து விளையாட்டுத் திடல், சிறுவர் விளையாட்டுத் திடல், 6.85 ஏக்கர் பரப்பளவில் ஏரி, உடற்பயிற்சி திடல், வாகன நிறுத்தம், கழிப்பிடம், கடைகள், மின்விளக்கு, சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு இன்று காலையில் பூங்கா பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.அந்த நேரத்தில் பூங்கா பணிகளின் நடத்தை, நிறைவு தேதி போன்ற விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர், கூடுதலாக மின்விளக்கு மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த பரிந்துரைகள் ...
திருமாவளவன்: கட்சியின் மறுசீரமைப்புக்கு நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்

திருமாவளவன்: கட்சியின் மறுசீரமைப்புக்கு நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்

அரசியல்
சென்னை: கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தினார்.இது தொடர்பாக அவர் முகநூல் நேரலையில் பேசியதாவது:விசிக கட்சியின் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில், சட்டப்பேரவை தொகுதி வாரியாக மாவட்டச் செயலாளர்களை நியமிக்க உயர்நிலைக் குழுவில் முடிவு செய்யப்பட்டது. இதன்படி, தற்போதுள்ள 144 மாவட்டச் செயலாளர்களை மாற்றி, சிலரை விடுவிக்க உள்ளோம். புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிப்பதோடு, மேலும் 90 புதிய செயலாளர்களையும் தொகுதி வாரியாக நியமிக்க உள்ளோம்.சட்டப்பேரவை தொகுதிகளுக்கென நியமிக்கப்படும் இந்த புதிய செயலாளர்கள், "தொகுதி மாவட்டச் செயலாளர்கள்" என்ற வகையில் பணியாற்றுவார்கள். இதற்காக மாவட்ட வாரியாக மறுசீரமைப்பு குழுக்களை அமைக்க இருப்போம்.ஓர் மாவட்டத்திற்கு 2 அல்லது 3 குழுக்கள் அமைக்கப்பட்டு, அந்த பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளை இணைத...
அமைச்சர் எ.வ.வேலு கோவையில் ஆய்வு…

அமைச்சர் எ.வ.வேலு கோவையில் ஆய்வு…

அரசியல்
3 ஆண்டுகள் திராவிட ஆட்சியில் கோவை மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறை 658 கிலோமீட்டர் தொலைவிற்கு சாலை செப்பணிடப்பட்டு உள்ளது. இன்னும் சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. 7 பாலப்பணிகள் எடுத்து கொள்ளப்பட்டு, 2 பாளப்பணிகள் 5.7 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேற்கு புறவழிச்சாலை 3 கட்டமாக பிரித்து கொண்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அவினாசி சாலை அடுத்தாண்டு ஜனவரி மாதம் பணிகள் முடிவடையும். ஒப்பந்ததாரர் உத்தரவாதம் கொடுத்துள்ளனர். 3 பாலப்பனிகள் தேசிய நெடுஞ்சாலையில் அறிவிக்கப்பட்டது. மெட்ரோ பணிகளால் அந்த பாலப்பணிகள் நிறுத்தப்பட்டது. மாவட்ட நிர்வாகம் தரப்பில் பொதுமக்கள் கருத்து கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில் 3 பாலப்பணிகள் வேண்டும் என்ற அடிப்படையில் கருத்து பெறப்படத்தை அடுத்து, தற்போது அதில் ஒன்றாக இந்த சாய்பாபா காலனி பாலப்பணி நடந்து வருகிறது. நெடுஞ்சாலை துறை சார்பில் தரமான பாலப்பணி...