அமைச்சர் எ.வ.வேலு கோவையில் ஆய்வு…

3 ஆண்டுகள் திராவிட ஆட்சியில் கோவை மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறை 658 கிலோமீட்டர் தொலைவிற்கு சாலை செப்பணிடப்பட்டு உள்ளது. இன்னும் சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன.

7 பாலப்பணிகள் எடுத்து கொள்ளப்பட்டு, 2 பாளப்பணிகள் 5.7 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேற்கு புறவழிச்சாலை 3 கட்டமாக பிரித்து கொண்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

img 20241105 wa00002207453006981265495 | அமைச்சர் எ.வ.வேலு கோவையில் ஆய்வு...



அவினாசி சாலை அடுத்தாண்டு ஜனவரி மாதம் பணிகள் முடிவடையும். ஒப்பந்ததாரர் உத்தரவாதம் கொடுத்துள்ளனர். 3 பாலப்பனிகள் தேசிய நெடுஞ்சாலையில் அறிவிக்கப்பட்டது. மெட்ரோ பணிகளால் அந்த பாலப்பணிகள் நிறுத்தப்பட்டது.

மாவட்ட நிர்வாகம் தரப்பில் பொதுமக்கள் கருத்து கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில் 3 பாலப்பணிகள் வேண்டும் என்ற அடிப்படையில் கருத்து பெறப்படத்தை அடுத்து, தற்போது அதில் ஒன்றாக இந்த சாய்பாபா காலனி பாலப்பணி நடந்து வருகிறது. நெடுஞ்சாலை துறை சார்பில் தரமான பாலப்பணி நடந்து வருகிறது.

அடுத்து, சிங்காநல்லூர் பகுதியில் பாலப்பணிகள் நடைபெறும். பசுமை வழிச்சாலை மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. சத்தியமங்கலம் சாலையில் உள்ள சில ஆலை உரிமையாளர்கள் அழுத்தம் கொடுத்ததை அடுத்து மத்திய அரசுடன் வலியுறுத்தப்பட்டது. எதிர்க்கும் விவசாயிகள் அதே சாலையில் தான் பயணிக்கின்றனர். சாலைகள் பொருளாதார வளர்ச்சிக்கு எந்தளவிற்கு முக்கியம் என்பதை அந்த பகுதி விவசாயிகளிடம் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். விவசாயிகளுக்கு அவர்களின் விளை பொருட்களை கொண்டு செல்லவே இதுபோன்ற சாலைகள் தேவைப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

என்எம்டிசி 153 வேலைவாய்ப்பு அறிவிப்பு: விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 10, 2024

Tue Nov 5 , 2024
செhttp://www.nmdc.co.inன்னை: தேசிய கனிம மேம்பாட்டு நிறுவனம் (என்எம்டிசி) தன்னுடைய பல்வேறு துறைகளில் 153 காலியிடங்களை நிரப்பும் நோக்கில் ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கமர்ஷியல், சுற்றுச்சூழல், ஜியோ மற்றும் க்யூசி, சுரங்கம், சர்வே, கெமிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், ஐஇ மற்றும் மெக்கானிக்கல் போன்ற துறைகளில் காலியிடங்கள் உள்ளன. விண்ணப்ப விவரங்கள்: கடைசி தேதி: 10 நவம்பர் 2024 அனுப்ப வேண்டிய இடம்: nmdc.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் காலியிடங்கள்: கமர்ஷியல் […]
job vacancies acs testing 1030x686 1 | என்எம்டிசி 153 வேலைவாய்ப்பு அறிவிப்பு: விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 10, 2024