
ஒருங்கிணைந்த மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் செல்வ பெருந்தகை பங்கேற்பு…
திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி எல்.கே.எஸ் மகாலில் இன்று நடந்தது .மாநில தலைவர் செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ் வரவேற்றுப் பேசினார்.திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் திருச்சி கலை, திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.கூட்டத்தில் முன்னாள் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர், இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் விச்சு என்கிற லெனின் பிரசாத், மாநில செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி ஆகியோர் பேசினர் முடிவில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி, சிறப்பரையாற்றினார். கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது கூட்டத்தில் பல்வேறு தீர்மானங...