ஒரே நாடு, ஒரே தேர்தல்: அரசியலமைப்பில் சேர்ப்பதற்கான சட்டக் கமிஷன் பரிந்துரை…
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' சட்டப்பிரிவை, அரசியலமைப்பு சட்டத்தில் ஒரு அத்தியாயமாக சேர்க்க, சட்ட கமிஷன் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோக்சபா மற்றும் மாநில தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தலாம், இந்த தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தினால் செலவுகளை குறைக்கலாம் என பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவும், வரவேற்பும் அளித்தனர்.
ஒரே நாடு ஒரே தேர்தல் முறையின் சாத்தியக்கூறுகளை ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.இந்தக் குழு பலமுறை கூடி விவாதம் மற்றும் ஆய்வு நடத்துகிறது. மக்களின் கருத்துக்களும் கேட்கப்படுகின்றன.
இந்நிலையில், "ஒரே நாடு, ஒரே தேர்தல்" என்ற ஒப்பந்தத்தை ஏற்படுத்த, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன், சட்ட கமிஷன் ஏற்கனவே ஆலோசனை நடத்தியது. சட்ட ஆணையம் ஏழு தேசிய அரசியல் கட்...