“கோவை: மாநகராட்சி பள்ளியில் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தொடக்கம்”

கோவையில் சித்தாபுதூர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில், மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வகுப்புகள், கோவை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் நீட் பயிற்சி மையம் இணைந்து வழங்கப்படுகின்றன. நிகழ்வின் தொடக்க விழா சித்தாபுதூர் பள்ளியில் நடைபெற்றது, இதில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் மற்றும் பல்வேறு மாமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

img 20241014 wa0044627142377550879790 - "கோவை: மாநகராட்சி பள்ளியில் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தொடக்கம்"

மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, நன்கு படிக்க வேண்டும் என்று அவர்களால் அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய ஆணையாளர், இந்த பயிற்சி வகுப்புகள் வாரத்திற்கு இரண்டு நாட்கள், நடைமுறை வகுப்புகளை பாதிக்காத வண்ணம் நடத்தப்படும் என்றும், மற்ற பள்ளிகளிலும் இந்த வாய்ப்பை விரும்பும் மாணவர்களை இப்பள்ளிக்கு அழைத்து வந்து, வகுப்புகளை நடத்தப் போவதாகவும் தெரிவித்தார். மேலும், மாணவர்களுக்கான போக்குவரத்து மற்றும் உணவு செலவுகளை மாநகராட்சியே ஏற்கும் என்றும் கூறினார்.

img 20241014 wa0045722298319270762827 - "கோவை: மாநகராட்சி பள்ளியில் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தொடக்கம்"

கோவை மாநகராட்சியில் அவிநாசி மற்றும் காளீஸ்வரன் மேம்பாலங்கள் மழைநீரால் பாதிக்கப்பட்ட நிலையில், அதனை சீர் செய்வதற்கான நடவடிக்கைகள எடுக்கப்பட்டுள்ளதாகவும் , இனி மழைநீர் தேங்காத வகையில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க  எஸ்எஸ்விஎம் டிரான்ஸ்ஃபார்மிங் இந்தியா கான்க்ளேவ் 2024 தொடக்கம்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

"கோவையில் மழை: பள்ளிகள் மதியம் வரை மட்டும் செயல்படும்"

Tue Oct 15 , 2024
கோவை மாவட்டத்தில் மழை காரணமாக, அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் இன்று மதியம் வரை மட்டும் செயல்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி அறிவித்தார். கன மழை மற்றும் வளிமண்டல நிலைமைகள் பாராமல் மாணவர்கள் பாதிக்கப்படாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மாதியம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும், […]
IMG 20241015 WA0000 - "கோவையில் மழை: பள்ளிகள் மதியம் வரை மட்டும் செயல்படும்"

You May Like