டொயோட்டா லேண்ட் குரூயிசர்  மாடல்களை RECALL செய்யும் நிறுவனம்.

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது லேண்ட் குரூயிசர் 300 ஆடம்பர எஸ்.யு.வி. மாடலை ரிகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. கடந்த பிப்ரவரி 2021 முதல் 2203 ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மொத்த 269 லேண்ட் குரூயிசர் 300 மாடல்களை திரும்ப பெற டொயோட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.லேண்ட் குரூயிசர் 300 மாடல்களின் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனின் ECU மென்பொருளை மாற்றியமைக்க முடிவு செய்திருப்பதால் கார்களை திரும்ப பெறுவதாக டொயோட்டா தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட கார்களின் மென்பொருளை எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக அப்டேட் செய்து கொடுப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மென்பொருள் முழுமையாக அப்டேட் செய்யப்படும் வரை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து காரை பயன்படுத்தலாம்.

பாதிக்கப்பட்ட கார்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை சம்பந்தப்பட்ட டொயோட்டா விற்பனை மையங்களை சேர்ந்த அதிகாரிகள் தொடர்பு கொள்வர். இது தொடர்பான சந்தேகம் மற்றும் விளக்கங்களை டொயோட்டா வாடிக்கையாளர் சேவை மையம் தெளிவுப்படுத்தும். தற்போது விற்பனை செய்யப்படும் லேண்ட் குரூயிசர் LC300 மாடலின் விலை ரூ. 2 கோடியே 10 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. இதில் 3.3 லிட்டர், V6 டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 305 ஹெச்.பி. பவர், 700 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 10-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

இதையும் படிக்க  டொயோட்டாவின் முதல் மின்சார எஸ்யூவியை 2025ல் வெளியிடுகிறது...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம்...

Wed Feb 28 , 2024
டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் செப்டம்பர் மாதத்திற்குள் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதேபோன்று, கடந்த ஜனவரியில் ஐந்து மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில், மே மாதம் முதல் ஐந்து மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த வழக்கை ஒத்திவைத்த சென்னை உயர்நீதிமன்றம், திட்ட முன்னேற்ற அறிக்கையை ஏப்ரல் 4ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க உத்தரவிட்டது. […]
images 19

You May Like