டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் செப்டம்பர் மாதத்திற்குள் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதேபோன்று, கடந்த ஜனவரியில் ஐந்து மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில், மே மாதம் முதல் ஐந்து மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இந்த வழக்கை ஒத்திவைத்த சென்னை உயர்நீதிமன்றம், திட்ட முன்னேற்ற அறிக்கையை ஏப்ரல் 4ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க உத்தரவிட்டது.