பிரேசிலில், எக்ஸ் சமூக வலைதளத்தைச் சுற்றியுள்ள சட்ட மற்றும் அரசியல் பிரச்சினைகள் கவனத்தை ஈர்த்துள்ளன. பிரேசில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அலெக்சான்டிரி டி மொரேஸ், முன்னாள் அதிபர் ஜெயிர் பொல்சினேரோவுக்கு ஆதரவான தீவிர வலதுசாரி கருத்துக்கள், வெறுப்புணர்வு மற்றும் போலி செய்திகளை நீக்க உத்தரவிட்டார்.
எக்ஸ் நிறுவனம், இந்த உத்தரவை மீறியதால், அதற்காக நீதிபதி மொரேஸ் விசாரணையை தொடங்கியுள்ளார். இதற்கிடையில், எக்ஸ் நிறுவனம் பிரேசிலில் உள்ள தனது அலுவலகத்தை மூடிவிட்டு, அங்கு பணியாற்றிய ஊழியர்களை நீக்கியது. இருப்பினும், எக்ஸ் தளம் பிரேசிலில் தொடர்ந்து செயல்பாட்டிலேயே உள்ளது.
Leave a Reply