புதுச்சேரி கவர்னராக நியமிக்கப்பட்ட கைலாஷ்நாதன், குஜராத்தில் முக்கிய நிர்வாகப் பொறுப்புகளை வகித்து, சூரிய மின் உற்பத்தியில் மாநிலத்தை முன்னணி நிலைக்கு கொண்டு வந்த அனுபவமுடையவர். அவர் தற்போது புதுச்சேரியில் சூரிய மின் சக்தி உற்பத்தியை மேம்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இந்த முன்னெடுப்பின் மூலம் அனைத்து அரசு அலுவலகங்களிலும் சூரிய மின் சக்தி பயன்பாட்டை அதிகரிக்க செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது.