பெரியாரின் 146வது பிறந்த நாளை வெல்ஃபேர் கட்சி சார்பில் கொண்டாட்டம்

IMG 20240917 WA0010 - பெரியாரின் 146வது பிறந்த நாளை வெல்ஃபேர் கட்சி சார்பில் கொண்டாட்டம்

வெல்ஃபேர் கட்சி சார்பில் ஆனைமலை அருகே உள்ள காளியாபுரம் பகுதியில் சமூகநீதி போராளி தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாளை நினைவுகூரும் நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் க.வீ.மணிமாறன், பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, சமூகநீதிநாள் உறுதிமொழி வாசிக்கப்பட்டு அனைவரும் ஏற்றனர். தந்தை பெரியார் சமூகத்தில் உருவாக்கிய புரட்சிகரமான மாற்றங்களை சிறப்பித்தும், புகழ் வணக்கம் செலுத்தியும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் வழக்கறிஞர் ம.தி. பிரபு அம்பேத்கர், வெல்ஃபேர் கட்சி கிளை நிர்வாகி சு. வீரமுத்து, பழனிசாமி, சி. முருகன், குமரன், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க  ஆவணங்களின்றி கனிம வளங்கள் எடுத்துச் சென்ற 4 லாரிகள் பறிமுதல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *