பெரியாரின் 146வது பிறந்தநாளை முன்னிட்டு ஆனைமலையில் தி.மு.க.வினர் வார்டு வாரியாக கொடியேற்றி இனிப்பு வழங்கி விழா கொண்டாடினர்.
பொள்ளாச்சி, செப். 17 – தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாள் விழா மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் தி.மு.க.வினர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர். நகர திமுக செயலாளர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில், ஆனைமலை முக்கோணத்தில் நடைபெற்ற விழாவில் கட்சியின் மூத்த பெண் உறுப்பினர் பட்டத்தரசி கட்சி கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
பேரூராட்சிக் கவுன்சிலர் அபுதாகிர் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். பெரியாரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது மற்றும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, பேரூராட்சியின் அனைத்து வார்டுகளிலும் தி.மு.க.வின் கொடி ஏற்றப்பட்டது. மிலாடி நபி தினத்தையும் ஒட்டி, சமூக நல்லிணக்கப் பேரணியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது.
பெரியாரின் 146வது பிறந்தநாளை ஆனைமலையில் தி.மு.க.வினர் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினர்…
Follow Us
Recent Posts
-
பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம்…
-
கோவையில் பிராமணர்கள் ஆர்ப்பாட்டம்…
-
கோவையில் அதி நவீன வசதிகளுடன் கூடிய மு ATK ஸ்கேன் லேப் மற்றும் டைக்னோஸ்டிஸ் திறப்பு விழா…
-
கோவை திரைப்பட வீநியோகஸ்தர்கள் சங்க பதவியேற்பு விழா…
-
கல்லூரிக்குள் வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்…
Leave a Reply