கோவை மாவட்டம் குனியமுத்தூரில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில், அகில இந்திய கிறிஸ்தவ பொதுநல இயக்கத்தின் மேற்கு மண்டல மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி இயக்கத்தின் தலைவர் பீட்டர் தலைமையில், பொதுச்செயலாளர் ரூபன் மாரிக்ஸ் முன்னிலையில் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தமிழக சிறுபான்மை மற்றும் வெளிநாடுகளில் வாழும் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே. எஸ். மஸ்தான் கலந்துகொண்டு, இளம் தொழிலதிபர்களை ஊக்குவிக்கும் வகையில் நினைவு பரிசுகளை வழங்கினார். மேலும், உடல் ஊனமுற்றோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, அவர்களை உத்வேகப்படுத்தினார்.
இந்த விழாவில் சுமார் 300க்கும் மேற்பட்ட சிறுபான்மையினருடன், கண்பார்வையற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர். தமிழ்நாடு சிறுபான்மை நல ஆணைய உறுப்பினர் முகமது ரபீக், அந்தோணி ஜஸ்டின், எபினேசர், ராஜன், இன்பராஜ் குணசேகரன் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகளும் பொதுமக்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
Leave a Reply