விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பணிகள் தீவிரம்…

election india - விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பணிகள் தீவிரம்...

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான பழனி தெரிவித்துள்ளார்.

இவர் மேலும் கூறியதாவது:

* மொத்த வாக்காளர்கள் 2,37,031 பேர் உள்ளனர். இதில் 1,16,962 ஆண் வாக்காளர்களும், 1,20,040 பெண் வாக்காளர்களும், 29 மாற்று பாலினத்தவரும் அடங்குவர்.

* 276 வாக்குச்சாவடி மையங்களில் மொத்தம் 1349 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் 662 வாக்குப்பதிவு கருவிகள் (Ballot Unit), 330 கட்டுப்பாட்டு கருவிகள் (Control Unit) மற்றும் 357 வாக்குப்பதிவினை உறுதி செய்யும் கருவிகள் (VVPAT) அடங்கும்.

* பதற்றமான 45 வாக்குச்சாவடிகளில் பணிபுரிய 53 நுண்பார்வையாளர்கள் பணியில் இருப்பார்கள். தொகுதிக்கு உட்பட்ட அரசு, அரசு சார்பு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க  மக்கள் நலவாழ்வு திட்டம் குறித்து விழிப்புணர்வு கண்காட்சி துவக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *