தமிழகத்தை தாக்கிய சுனாமி விபத்துக்குப் பின்னர் இன்று 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், சுனாமியில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து, பல்வேறு இடங்களில் அஞ்சலிகள் செலுத்தப்பட்டன.
சென்னை நொச்சிக்குப்பம் கடற்கரை பகுதியில், சுனாமி நினைவு தினத்தையொட்டி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும் உறவினர்களும் கலந்து கொண்டு பால் ஊற்றியும், மலர்களை தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று, பால் ஊற்றி, மலர் தூவியதும், மெழுகுவர்த்தி ஏற்றியும், உயிரிழந்தவர்களுக்கு தனது அஞ்சலியை தெரிவித்தார்.
சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, மறைந்தவர்களின் நினைவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.