Tuesday, January 21

சர்வதேச எண்களில் இருந்து வரும் மோசடி அழைப்புகள்: மத்திய தொலைத் தொடர்பு துறையின் எச்சரிக்கை

+91 இலிருந்து தொடங்காத +8, +85, +65 போன்ற சர்வதேச எண்களில் இருந்து வரும் அழைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய தொலைத் தொடர்புத் துறை வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச எண்களில் இருந்து மோசடியாளர்கள் அரசு அதிகாரிகளைப் போல பேசி, பணமோசடியில் ஈடுபடுகின்றனர். இதனை தடுக்கும் வகையில், அக்டோபர் 22 அன்று புதிய அமைப்பை தொலைத் தொடர்புத் துறை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் அடுத்த 24 மணிநேரத்தில் 1.35 கோடி சர்வதேச அழைப்புகள் மோசடி அழைப்புகளாக அடையாளம் காணப்பட்டு தடுக்கப்பட்டுள்ளன.

தற்போது, அறிமுகமில்லாத சர்வதேச எண்களில் இருந்து வரும் அழைப்புகளுக்கு பதிலளிக்காமலும், இவற்றை ‘சஞ்சார் சாத்தி’ இணையதளத்தில் புகார் அளிக்குமாறும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், மோசடி அழைப்புகள் குறித்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள், சர்வதேச அழைப்புகளை தெளிவாக அடையாளம் காட்டும் தொழில்நுட்ப மேம்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.

மத்திய அரசு, மோசடி அழைப்புகளை தடுப்பதற்காக பிரத்யேக குழு ஒன்றை அமைத்து நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு அறிவுரை:

அறிமுகமில்லாத சர்வதேச எண்களில் இருந்து வரும் அழைப்புகளை எடுத்து பேச வேண்டாம்.

மிஸ் கால்களை திரும்ப அழைக்க கூடாது.

சந்தேகமுள்ளதாக தோன்றும் அழைப்புகள் குறித்து உடனடியாக புகார் அளிக்க வேண்டும்.

இதையும் படிக்க  பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *