வால்பாறையில் கூட்டமாக சுற்றும் செந்நாய்கள் தேயிலை தொழிலாளர்கள் அச்சம்…

IMG 20240921 WA0007 - வால்பாறையில் கூட்டமாக சுற்றும் செந்நாய்கள் தேயிலை தொழிலாளர்கள் அச்சம்...

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உலாந்தி பொள்ளாச்சி மானாம்பள்ளி வால்பாறை அமராவதி உடுமலை என ஆறு வனச்சரகங்கள் கொண்ட பகுதியாகும் இப்பகுதிகளில் காட்டு யானைகள், சிறுத்தை, கருஞ்சிறுத்தை, புள்ளிமான், இருவாச்சி மற்றும் அபூர்வ பறவை இனங்கள் தாவர உண்ணிகள் இருப்பிடமாக திகழ்கிறது.

img 20240921 wa00042670700734925015139 - வால்பாறையில் கூட்டமாக சுற்றும் செந்நாய்கள் தேயிலை தொழிலாளர்கள் அச்சம்...

குறிப்பாக வால்பாறை பகுதி தேயிலைத் தோட்டங்கள் அதிகளவில் உள்ளதால் ஏராளமான தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்

நாள்தோறும் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் சிறுத்தைகள் கரடிகள் அவ்வப்போது தொழிலாளர் குடியிருப்பு பகுதிகளில் உலா வருவது வாடிக்கையாகிவிட்டது இதனால் தினம்தோறும் உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது

இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள கருமலையில் உள்ள தனியார் தேயிலை தோட்டப்பகுதியில் செந்நாய் கூட்டங்கள் தற்போது அதிக அளவில் தென்படுகிறது

இதனால் குடியிருப்புகளில் வசிக்கும் முதியவர்கள் முதல் குழந்தைகளுடன் வசிக்கும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் குடும்பங்கள் அச்சத்தில் உள்ளனர் மேலும் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து செந்நாய் கூட்டத்தை அடர் வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

இதையும் படிக்க  கோவை கணுவாய் தடுப்பணை புனரமைப்பு பணி,மாவட்ட ஆட்சியர் தலைமையில் தொடங்கியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *