இளநிலை யோகா, இயற்கை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு செப்டம்பர் 23 முதல் நடைபெற உள்ளது. தமிழக அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் இயங்கும் அரசு கல்லூரிகளான சென்னை அரும்பாக்கம் மற்றும் செங்கல்பட்டு கல்லூரிகளில் மொத்தம் 160 இடங்கள் உள்ளன.
மேலும், 16 தனியார் கல்லூரிகளில் உள்ள 1,500 இடங்களில் 960 இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டிற்கு மற்றும் 540 இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும்.
தகுதியான மாணவர்களின் தரவரிசை பட்டியல் 19-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அப்சர் பேகம் (கட்ஆஃப் 198.50) அரசு ஒதுக்கீட்டில் முதலிடத்தையும், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயசிவனிதா (கட்ஆஃப் 195) நிர்வாக ஒதுக்கீட்டில் முதலிடத்தையும் பெற்றுள்ளனர்.
கலந்தாய்வு நாட்கள்:
செப்.23: சிறப்பு பிரிவினர்
செப்.24: பொது பிரிவினர்
செப்.26-27: நிர்வாக ஒதுக்கீட்டிற்கு
இந்த ஆண்டு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அறிவிக்கும்பட்சத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் வழங்கப்படுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Leave a Reply