வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகியுள்ளது.
இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஒடிசா கடற்கரை அருகே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்ன், மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் போடப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.