ஆனைமலையை அடுத்த அங்கலக்குறிச்சி அருகே அமைந்துள்ளது நந்தகோபால்சாமி மலை
கரடு முரடான பாதைகளை கடந்து சுமார் 1500 அடிக்கு மேல் உள்ள நந்த கோபால்சாமி மலையில் ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம் வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால்
ஒரு சில நாட்களில் மட்டுமே இங்கு வழிபாடு செய்ய பக்தர்களுக்கு அனுமதி உண்டு. இந்நிலையில் இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் காலை முதலே பக்தர்கள் மலை ஏற துவங்கினர். தொடர்ந்து 9 மணி அளவில் பக்தர்கள் மலையேறி வந்து நீண்ட வரிசையில் காத்து நின்று நந்தகோபால்சாமி பாமா ருக்மணி தாயாரை வழிபாடு செய்தனர்.
புரட்டாசி சனிக்கிழமை ஒட்டி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து பக்தர்கள் தங்கள் வேண்டுதலாக மலை உச்சியில் உள்ள கற்களை அடுக்கி வைத்து தாங்களும் வீடு கட்ட வேண்டும் என வேண்டுதலையும் நிறைவேற்று விதமாக கற்களை அடுக்கி வைத்து வழிபாடு செய்தனர்.
Leave a Reply