Sunday, April 13

விமன் இந்தியா மூவ்மென்ட் செயலக கூட்டம் திருச்சியில் நடைபெற்றது…

“பெண்களின் பாதுகாப்பு; மனித சமுதாயத்தின் பொறுப்பு”, என்ற தலைப்பில் அக்டோபர் 02 முதல் டிசம்பர் 02 வரை தேசிய அளவிலான பிரச்சாரத்தை தமிழகத்தில் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்த பிரச்சாரத்தில் பேரணி, பொதுக்கூட்டம், மனித சங்கிலி, கருத்தரங்கம், வட்டமேசை விவாதம், சுவரொட்டி, துண்டு பிரசுரம் விநியோகம், மௌன போராட்டம், விழிப்புணர்வு நாடகம், இணையவழி பிரச்சாரம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அக்டோபர் 25 அன்று இணைய வழி கருத்தரங்கம் நடத்தவும், நவம்பர் 19 அன்று அனைத்து மாவட்டங்களிலும் ஒரு நாள் பிரச்சாரம் நடத்தவும் திட்டமிட்டுள்ளது.

பெண்களின் பாதுகாப்பு பிரச்சாரத்திற்கு சமூக ஆர்வலர்களையும், பெண்களின் பாதுகாப்பு குறித்து ஆர்வம் உள்ளவர்களையும் இதில் பங்குக் கொண்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த அழைக்கிறோம். செயலகக்குழு கூட்டத்தில் மாநில தலைவர் பாத்திமா கனி, பொதுச் செயலாளர் ஷபிகா, செயலாளர் தஸ்லிமா, செயற்குழு உறுப்பினர்கள் மெஹராஜ் மற்றும் காமிலா ஆகியோர் முன்னிலையில் தீர்மானிக்கப்பட்டது.

இதையும் படிக்க  வாஷிங் மெஷினில் பதுங்கிய பாம்பு: 1 மணி நேர போராட்டத்திற்கு பின்பு உயிருடன் மீட்பு...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *